மாத்தறையில் இருந்து கதிர்காமம் வரையிலான ரெயில் பாதை நிர்மாணப் பணியின் முதல் கட்டத்தின் கீழ் ரெயில் சேவைகள் இந்த வருடத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
மாத்தறையில் இருந்து பெலியத்த வரையில் ரெயில் பாதையின் நிர்மாணப் பணிகள் ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதிக்கு முன்னர் பூர்த்தி செய்யப்படும் என்று போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சின் செயலாளர் ஜி.ஏ.எச்.விதானகே தெரிவித்தார்.
2012 ஆம் ஆண்டில் இதன் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இதன் நீளம் 38 கிலோ மீற்றர்களாகும். இந்த ரெயில் பாதையின் அடுத்த கட்டத்தின் கீழ் பெலியத்தையில் இருந்து ஹம்பாந்தோட்டை, கதிர்காமம் ஊடாக மத்தள விமான நிலையம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகம் வரையில் பாதையை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதுஇதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள. என்றும் போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சின் செயலாளர் ஜி.ஏ.எச்.விதானகே கூறினார்.
