Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மாணவர் சரத் பிரபு மரணத்தை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் – த.மா.கா மாணவர் அணி

January 19, 2018
in News, Politics, World
0

”முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி டாக்டர் சரத் பிரபு மரணத்தை சி.பி.ஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும். இல்லை என்றால், சென்னை உயர்நீதிமன்றத்தில் த.மா.கா மாணவர் அணி சார்பில் வழக்கு தொடர்வோம்” என்று தமிழ் மாநில காங்கிரஸ் மாணவர் அணி தலைவர் எம்.சுனில் ராஜா எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக, எம்.சுனில் ராஜா, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நேற்று ஓர் கடிதம் அனுப்பினார். அதன் நகலை கோட்டையில் உள்ள முதல்வர் தனிப்பிரிவில் கொடுத்தார். இதுகுறித்து, சுனில் ராஜா கூறுகையில், ”திருப்பூர் பாரபாளையம் ஊரைச் சேர்ந்த செல்வமணி, தனலட்சுமி ஆகியோரின் மகன் டாக்டர் எஸ்.சரத்பிரபு கடந்த 2015 ஆம் ஆண்டு கோவை மருத்துவக் கல்லூரியில் இளங்கலை மருத்துவ படிப்பை முடித்தார். 2017 ஆம் ஆண்டு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று டெல்லியில் உள்ள யூனிவர்சிட்டி காலேஜ் ஆப் மெடிக்கல் சயின்ஸ் கல்லூரியில் முதுகலை மருத்துவப் படிப்பில் சேர்ந்தார். அதவது அங்கு எம்.டி (பொது மருத்துவம்) படிக்கச் சேர்ந்தார். கல்லூரியில் சேர்ந்து ஏழு மாதங்களே ஆன நிலையில் 17.1.18 அன்று சரத்பிரபு, அவர் தங்கி இருந்த வீட்டின் கழிவறையில் இறந்து கிடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர், இறப்பு தற்கொலை என்று டெல்லி காவல் துறையால் கூறப்படுகிறது.

சரத் பிரபு உடலில் காயங்கள் இருப்பதாக அவரது தந்தை தெரிவித்துள்ளார். 16 ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு தொலைபேசியில் நன்றாக பேசியதாகவும் தெரிவித்துள்ளார். ‘தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு தன் மகன் கோழை அல்ல. அவர், தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பே இல்லை’ என்றும் அவர் கூறியுள்ளார். டெல்லி காவல் துறை, சரத் பிரபு உடல் அருகில் இன்சுலின், பொட்டாசியம் போன்ற சில வேதியியல் மருந்துகள் மற்றும் ஊசி போன்றவை இருந்ததாகவும், குறிப்பாக இடது கை மற்றும் தலையில் வெட்டு காயம் இருந்ததாகவும் கூறியுள்ளனர்.

ஏற்கனவே, கடந்த 2016 ஆம் ஆண்டு திருப்பூரைச் சேர்ந்த எய்ம்ஸ் கல்லூரி இளம் மருத்துவ மாணவர் சரவணன் மர்மமான முறையில் இறந்தார். அப்போதும் அவர் பொட்டாசியம் போன்ற வேதிப்பொருளை பயபடுத்தித் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று டெல்லி காவல் துறையால் கூறப்பட்டது. தற்போதும் சரத்பிரபு மர்மமான முறையில் இறந்துள்ளார். பொட்டாசியம், இன்சுலின் போன்ற வேதியியல் பொருட்கள் கிடைத்துள்ளது என்று டெல்லி காவல்துறை கூறியிருப்பது இரண்டு மாணவர்கள் இறப்பையும் சந்தேகத்துக்கு உள்ளாக்கி இருக்கிறது.

ஏற்கனவே, வெளிமாநிலங்களில் உள்ள உயர் கல்வி நிலையங்களில் படிக்கும் தமிழக மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள நிலையில் இதுபோன்ற மர்மமான மரணங்கள், தமிழக மாணவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, சரத்பிரபு இறப்பில் உள்ள உண்மையை வெளிக்கொண்டு வரவும் பாரபட்சமின்றி விசாரணை நடைபெறவும் இந்த வழக்கை, சி.பி.ஐ விசாணைக்கு மாற்றியும் சரத் பிரபுவின் உடல் கூறாய்வை தமிழக மருத்துவ வல்லூநர்கள் குழுவை கொண்டு நடத்தவும் வேண்டும். அதற்கு தேவையான உத்தரவுகளை முதல்வர் எடப்படி பழனிசாமி பிறப்பிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த மனுவின் நகலை, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி ஆகியோருக்கும் அனுப்பி வைத்துள்ளார் சுனில் ராஜா. இதுகுறித்து அவரை நாம் தொடர்பு கொண்டு கேட்ட போது, ”வடநாடு சென்று உயர் கல்வி பயிலும் தமிழக மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. கடந்த சில ஆண்டுகளாக இதுபோன்ற துயர சம்பவங்கள் அதிரித்து உள்ளன. இந்த விஷயத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும். தமிழகத்தில் இருந்து ஒரு சிறப்பு குழுவை டெல்லிக்கு அனுப்பி சரத் பிரபு மரணம் குறித்து விசாரணை நடத்த முதல்வர் உத்தரவிட வேண்டும். சி.பி.ஐ விசாரணைக்கு அவர் ஏற்பாடு செய்ய வேண்டும். இல்லை என்றால் சென்னை உயர்நீதிமன்றத்தில் த.மா.கா மாணவர் அணி சார்பில் வழக்கு தொடர்வோம்” என்று கூறினார்.

Previous Post

‘ரயில்வேத்துறையில் லாபத்தை அதிகரிக்க ராமதாஸ் சொல்லும் யோசனைகள்..!’

Next Post

ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் தரம்உயர்கிறது! 

Next Post

ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் தரம்உயர்கிறது! 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures