கிண்ணியா கல்வி வலயத்துக்கு உட்பட்ட குறிஞ்சாகோனி கோட்டத்தில் அமைந்துள்ள கிண்ணியா அலிகார் மகா வித்தியாலய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆரம்ப பிரிவு ஆசிரியர் கட்டடம் அமைத்து தரக் கோரியே ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
கிண்ணியா பிரதேசத்தில் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும் இதுவரை இவ்வாறான பாடசாலை குறைகள் நிவர்த்தி செய்யப்படாததையிட்டு தாம் கவலை கொள்வதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.