பருத்தித்துறை வீதியில் நீர்வேலி அரசகேசரிப் பிள்ளையார் கோயிலுக்கு செல்லும் வீதிக்கு அருகில் இருந்த மாட்டு இறைச்சிக் கடை நேற்று வெள்ளிக்கிழமை இரவு 11.30 மணியளவில் இனந்தெரியாத குழு ஒன்றால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
இந்தக் கடை வலி.கிழக்கு பிரதேச சபையினரால் நிர்வகிக்கப்படும் நிலையில் சம்பவம் குறித்து கடை நடத்துபவரால் வலி.கிழக்கு பிரதேச சபையினருக்கு அறிவிக்கப்பட்டதுடன் அச்சுவேலி பொலிஸ் நிலையத்திலும் முறையிடப்பட்டுள்ளது.
தீக்கிரையாக்கப்பட்ட கடைக்கு அருகில் இன்னுமொரு மட்டு இறைச்சிக் கடையும் உள்ளது. அதற்கு எந்த சேதமும் ஏற்படுத்தப்படவில்லை
அதேவேளை, அந்தப் பகுதியில் உள்ள சைக்கிள் கடையொன்று கடந்த ஆண்டு எரியூட்டப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது.