Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மாக்கந்துர மதுஷ் 700 கோடி இரத்தினக்கல்லை எப்படி கொள்ளையடித்தான்?

February 28, 2019
in News, Politics, World
0
மாக்கந்துர மதுஷ் மற்றும் சகாக்கள் நாளை டுபாய் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படக் கூடுமென சொல்லப்படுகிறது… முன்னதாக அவர்கள் ஆஜர் செய்யப்படும் திகதிகள் தொடர்பில் வந்த தகவல்கள் தவறானவை.
இன்று அவர்கள் ஆஜர் செய்யப்படுவார்கள் என்று வந்த ஒரு தகவலையடுத்து டுபாய் பொலிஸுக்கு செல்ல டுபாயில் உள்ள மதுஷ் ஆதரவு சட்டத்தரணிகள் முயற்சிகள் எடுத்தனர் என்று ஒரு தகவல்.
நாளை நீதிமன்றத்தில் அவர்கள் ஆஜர் செய்யப்பட்டாலும் இன்னும் ஒரு மாத காலத்திற்கு அவர்களை தடுத்து வைத்து விசாரிக்க டுபாய் பொலிஸ் அனுமதி கோரவுள்ளதாக சொல்லப்படுகிறது…
இரத்தினக்கல் விவகாரம்…
இரத்தினக்கல் கொள்ளை விவகாரத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன..
கொள்ளைக்கு சென்ற ரீமை இரண்டாக பிரித்த மதுஷ் வாடிக்கையாளராக செல்ல ஒரு ரீமும் அவர்களை மடக்கும் பொலிஸாக நடிக்க மற்ற ரீமையும் தயார் செய்துள்ளார்…
ஒரு குழுவுக்கு தெரியாமல் மற்ற குழு செயற்படுவதை கண்காணித்த மதுஷ் பொலிஸாக சென்ற குழுவிடம் விடுத்த எச்சரிக்கை “ யாரின் உயிருக்கும் ஆபத்தில்லாமல் கேமை முடியுங்கள்” என்பது தான்…
ஒஸ்ட்ரிய பிரஜையுடன் சென்ற முதல் குழு வாடிக்கையாளராக சென்றது. அவர்கள் இரத்தினக்கல்லை ஆராய்ந்து கொண்டிருந்தபோது திடீரென பொலிஸ் சீருடையுடன் புகுந்த மற்ற குழு இந்த வெள்ளையர் இன்ரநெஷனல் கொள்ளைக்காரர் என்றும் அவருக்கு இன்ரபோல் ரெட் நோட்டீஸ் இருப்பதால் அவரை கைது செய்வதாகவும் கூறி விலங்கை மாட்டியுள்ளது…
அதேசமயம் இரத்தினக்கல் வர்த்தகரை தாக்கி அவர் கையில் இருந்த கல்லையும் எடுத்து வெள்ளையர் மற்றும் அவருடன் இருந்த தரகரையும் வேனில் ஏற்றி மஹரகமயில் இறக்கிவிட்டு சென்றது குழு..
வெள்ளையர் மதுஷின் நட்பு வட்டாரத்தில் உள்ளவர் என்றபடியால் அவருக்கு கொடுக்கப்பட்ட வேலை கல்லை பார்வையிடுவது மட்டுமே. ஆனால் அவரை அழைத்து சென்ற தரகருக்கு இதன் பின்னனியில் மதுஷின் கை இருப்பது தெரியாது.
1. இரத்தினக்கல் வியாபாரியிடம் தரகராக செல்லும் ஒருவருடன் தனது ஆள் ஒருவரை முதலில் இணைப்பது… அதுவே இந்த வெள்ளையர்..
2. பின்னர் இன்னொரு போலி பொலிஸ் ரீமை அனுப்பி அவர்களை மடக்குவது…
இதுவே மதுஷின் மாஸ்டர் ப்ளேன்.. ..
இப்படி மஹரகமவில் இறக்கப்பட்ட வெள்ளையரும் அந்த தரகரும் மீண்டும் கொள்ளையிடப்பட்ட இரத்தினக்கல் வர்த்தகரின் வீட்டுக்கு வந்துள்ளன..
அதற்கிடையில் வர்த்தகர் பொலிசுக்கு தகவல் கொடுத்திருந்தார். அப்போதே மதுஷின் கேம் வெள்ளையருக்கு தெரியவந்துள்ளது. ஆனால் அதனை கட்டிக்கொள்ளாத அவர் பயந்தவர் போல நடித்து வெளியில் வந்து ஓரிரு நாளிலேயே இங்கிருந்து புறப்பட்டுவிட்டார்.
பொலிஸ் வேடத்தில் வந்து கொள்ளையிட்ட ரீம் கையில் கல் கிடைத்த கையோடு மதுஷிடம் தொலைபேசியில் விடயத்தை சொன்னது..
யாருக்கும் பாதிப்பில்லாமல் கேமை முடித்தீர்கள் என்று அவர்களை அப்போது பாராட்டியுள்ளார் மதுஷ்..
இரத்தினக்கல் விவகாரம் இன்னும் ஓய்ந்து விடவில்லை…
இந்த பின்னணி எதுவும் தெரியாமல் வெள்ளையரை அழைத்து சென்ற தரகரிடம் பொலிஸ் நேற்று வாக்குமூலம் பெற்றுள்ளது.
மதுஷ் கைது செய்யப்பட்ட பின்னர் கடந்த வாரம் இரத்தினக்கல் சொந்தக்காரருக்கு டுபாயில் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளதாக தகவல்…
“ நீ மிகவும் துள்ளுகிறாய்… உனது ஆட்டத்தை நிறுத்திக் கொள்… நல்லவிதத்தில் சொல்கிறோம்…” என்று அந்த அழைப்பில் சொல்லப்பட்டுள்ளது… அதுபற்றி விசாரணைகள் நடக்கின்றன…
மறுபுறம் இந்த இரத்தினக்கல்லை சவூதியில் வேலைசெய்யும்போது அங்குள்ள குப்பை மேடு ஒன்றில் இருந்து எடுத்து குரியர் மூலம் இலங்கைக்கு அனுப்பியதாக சொல்லியுள்ளார் இரத்தினக்கல்லை பறிகொடுத்த வர்த்தகர்.. அதன் உண்மைத்தன்மை குறித்தும் ஆராயப்படுகிறது…
கொழும்பில் சிக்கும் புள்ளிகள்..!
மதுஷ் மற்றும் சகாக்கள் கைது செய்யப்பட்ட பின்னர் அவர்களின் இதர சகாக்கள் மத்தியில் ஒரு போட்டி உருவாகியுள்ளது…
அதன் விளைவாக ஆளையாள் காட்டிக் கொடுப்பதன் எதிரொலியாகவே மதுஷின் சகாக்கள் பலர் கைது செய்யப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது..
அதேசமயம் மதுஷின் பணத்தை பெற்று வியாபார நடவடிக்கைளில் ஈடுபட்ட பலர் அதிலிருந்து தப்பிக்க காட்டிக்கொடுப்பு வேலைகளையும் செய்வதாக தெரிகிறது…
கைது செய்யப்பட்டுள்ள மதுஷின் சகாக்கள் பலரிடம் இருந்து கிடைக்கும் தகவல் மூலம் இப்படியானவற்றை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தென்மாகாணத்தில் மதுஷின் பணம் தினமும் வட்டிக்கு கொடுக்கப்பட்டு வந்த நிலையில் அவற்றை செய்த பலர் தலைமறைவாகியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது…
தனது பணத்தை கொண்டு ஐரோப்பாவில் குடியேற மதுஷ் திட்டமிட்டதாக வெளிவந்த செய்திகள் குறித்து முன்னர் கூறியிருந்தேன்.. அதேபோல் அவர் தீவு ஒன்றை விலைக்கு வாங்கவும் திட்டமிட்டிருந்ததாக புதிய தகவல்கள் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது..
அதேபோல் மதுஷ் தரப்புடன் தொடர்பு வைத்திருந்த யாழ்ப்பாண வர்த்தக பிரமுகர் ஒருவர் குறித்தும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன…
அவர் விசாரணை வலையில் சிக்கியுள்ளார்
Previous Post

போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை

Next Post

பாகிஸ்தானுக்கானஇன்றைய விமான சேவைகள் ரத்து – ஸ்ரீலங்கன் விமான சேவை

Next Post

பாகிஸ்தானுக்கானஇன்றைய விமான சேவைகள் ரத்து - ஸ்ரீலங்கன் விமான சேவை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures