Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மாகாணங்களை நோக்கி முறையாகவும் முமுமையாகவும் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்

November 21, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
மாகாணங்களை நோக்கி முறையாகவும் முமுமையாகவும் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்

இலங்கையின் மத்திய ஆட்சியில் குவிந்திருக்கும் அரசியல் பொருளாதார அதிகாரங்கள் மாகாணங்களை நோக்கி முறையாகவும் முமுமையாகவும் பகிரப்பட வேண்டு. ம் மாகாண சபைக்கான முழு அதிகாரத்தையும் அரசு வழங்க வேண்டும் என தன்னிகரில்லாத் தலைவர் பத்மநாபா உறுதியுடன் செயற்பட்டார் என்று திருகோணமலை மாவட்ட தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் செயலாளர் சின்னமோகன் பத்மநாபாவின்  74 ஆவது பிறந்த நாள் நவம்பர் 19 ஆம் திகதி திருகோணமலை மாவட்ட பனிமனையில் இடம்பெற்ற போது தெரிவித்தார்.

அவர் நிகழ்வில் மேலும் குறிப்பிடுகையில்,

பத்மநாபா காட்டிய அரசியல் பாதையில் ஈழ மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்காகவும் ஈழ மக்களிடையே சமூக சமத்துவத்துக்காகவும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் சுயாட்சி கொண்ட அதிகாரங்களுடன் உண்மையான மக்களாட்சி நிலவ வேண்டுமெனவும் அயராது உழைத்து தமது வாழ்வை அர்ப்பணித்த அனைவரினதும் கனவுகளை நனவாக்கும் இலட்சியத்துடன் நாம் அனைவரும் தொடர்ந்து பயணிப்பதை உறுதி செய்யும் தோழமை தினமாக இந்த நாளைக் கொள்வோம்.

சாதி ஏற்றத்தாழ்வுகளற்ற பெண்ணடிமைத்தனமற்ற சக மனிதர்களை மதிக்கும் மாண்புகள் கொண்ட அறிவும் ஆற்றல்களும் நிறைந்த முற்போக்கான சமூக முன்னேற்றங்களை நோக்கி முன்னேறுவதற்கு தடைகளற்ற சமுதாய கட்டமைப்புக்காக விடாது போராடுவோம். 

உலகின் அனைத்து அரசியல் பொருளாதார அம்சங்களும் உலக மயமாகிவிட்ட நிலையில் உலக மக்களிடையே சகோதரத்துவமான உறவுகள் சமத்துவமான சமூக பொருளாதார முன்னேற்றங்கள் அச்சமற்ற நிம்மதியான மனநிலையுடன் வாழும் நிலை என்பனவற்றை அடைய உலகில் எந்த மூலையிலும் யுத்தமற்ற அழிவாயுதங்கள் எதுவும் பயன்படுத்தப்படாத இயற்கை வளங்களை பாதுகாக்கப்படுகின்ற பராமரிக்கப்படுகின்ற உழைக்கின்ற உலக குடிமக்கள் ஒவ்வொருவரும் தமக்குத் தேவையானவற்றைப் பெறுகின்ற உலகைக் காண உழைத்திடுவோம் என உறுதி கொள்வோம் என்றார் சின்னமோகன்.

Previous Post

பசிலுக்கு பிடியாணை வரக்கூடிய நாளில் பேரணிக்கு ஓடும் மகிந்த! திருமலை புத்தருடன் சில B பிளான்கள்

Next Post

சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் ஈகைச் சுடரேற்றலுடன் ஆரம்பமானது மாவீரர் வாரம்

Next Post
சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் ஈகைச் சுடரேற்றலுடன் ஆரம்பமானது மாவீரர் வாரம்

சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் ஈகைச் சுடரேற்றலுடன் ஆரம்பமானது மாவீரர் வாரம்

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures