மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர் இன்றும் பாராளுமன்றத்தைப் புறக்கணிக்க தீர்மானித்துள்ளனர்.
இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்வது தொடர்பில் வினவிய போது, பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன இதனைக் கூறியுள்ளார்.
இதேவேளை, இன்றைய தினம் பாராளுமன்றத்திலுள்ள பொது மக்கள் பார்வையிடும் பகுதியும், சபாநாயகரின் விசேட பிரதிநிதிகள் பகுதியும் மூடப்பட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

