Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மஹிந்த – மைத்திரிக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

November 21, 2018
in News, Politics, World
0

சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதியும், குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ச தொடர்ந்தும் தானே பிரதமர் என்று கூறிக்கொண்டு அரச நிதியை பயன்படுத்துவது தேசத்துரோகம் என்றும் குற்றம்சாட்டியுள்ள ஐக்கிய தேசியக் கட்சி, மஹிந்த மற்றும் அவரது விசுவாசிகளின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சிறிலங்கா நாடாளுமன்றில் பிரதமராக நியமிக்கப்பட்டிருந்த மஹிந்த ராஜபக்ச மற்றும்அவரது அமைச்சரவைக்கு எதிராக இரண்டு தடவைகள் நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில், அவர்களது அரசாங்கம் பதவி இழந்த நிலையில் நாட்டில் அரசாங்கம் ஒன்று இல்லாத நிலைமை உருவாக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சடடத்தரணி அஜீத் பீ.பெரெரா தெரிவித்துள்ளார்.

எனினும் நம்பிக்கையில்லாப் பிரேரணைகளை தாங்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று சூளுரைத்துவரும் மஹிந்தவும் அவரது தரப்பினரும் தாங்களே தொடர்ந்தும் அரசாங்கம் என்று கூறிவருது மாத்திரமன்றி அரசாங்கமாக செயற்பட்டும் வருகின்ற நிலையில் அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அஜீத் பீ பெரேரா இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கின்றார்.

“நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் எங்களுக்கே உள்ளது. இதனை பல்வேறு சந்தர்ப்பங்களில் நிரூபித்தும் காட்டியுள்ளோம். 122 பேர் எங்களுடன் உள்ளனர். இன்னும் பலர் எங்களுடன் இணைவதற்கு தயாராக உள்ளனர். அவர்களது பாதுகாப்புக்காக அவர்கள் தொடர்பிலான தகவல்களை இப்போது வெளிப்படுத்த முடியாது. நாட்டின் நிதி தொடர்பான முழுமையான அதிகாரம் நாடாளுமன்றத்துக்கே உள்ளது.

நிதி தொடர்பில் ஜனாதிபதிக்கு எந்தவித அதிகாரமும் இல்லை. நீதிமன்றத்துக்கும் அது தொடர்பான அதிகாரம் இல்லை. 14 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நாங்கள் பெரும்பான்மையை நிரூபித்தோம். 15 ஆம் திகதி சபாநாயகர் அதனை உறுதிப்படுத்தினார்.

அதன் பின்னர் மஹிந்த தலைமையிலான போலி அரசாங்கம் கலைக்கப்பட்டுவிட்டது. இனி அதற்கு எந்த அதிகாரமும் இல்லை. நாட்டில் தற்போது பிரதமர் மற்றும் அமைச்சரவை என்ற ஒன்று இல்லை. அவ்வாறான நிலையில் மஹிந்த தரப்பினர் அரசாங்கத்தை போல செயற்படுகின்றனர். இன்றைய தினமும் அமைச்சரவை கூட்டம் இடம்பெறவுள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இவ்வாறான சட்டவிரோத அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்படும் எந்தவொரு தீர்மானமும் செல்லுபடியற்றதாகவே கருதப்படும் என்பதை நினைவுப்படுத்துகின்றோம்.

அவர்களுக்கு அரச நிதியை பயன்படுத்த எநதவொரு அதிகாரம் இல்லை. இவ்வாறான செயல்களில் ஈடுபடுபவர்கள் அனைவரும் தேசத் துரோகத்தில் ஈடுபடுவதாகவே கருதப்படுவர். இவர்கள் அனைவரும் நாட்டின் சட்டத்திற்கு அமைய பொறுப்புக்கூற வேண்டும். அரசாங்கம் இல்லாத நிலையில் அரசாங்கத்தை போன்று செயற்படுவது தேசத்துரோகம் ஆகும்”.

சடடவிரோதமாக அரசாங்கமாக செயற்பட்டுவரும் மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது அமைச்சர்களின் தேவைகளை அரச நிதியில் நிறைவேற்றி வரும் அரச பணியாளர்கள் அதனை தமது சொந்த பணத்தில் இருந்து மீள செலுத்த வேண்டிய நிலையும் ஏற்படும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜீத் பீ.பெரேரா எச்சரித்துள்ளார்..

“அரச நிதி முகாமைத்துவம் தொடர்பான எங்களது பலத்தினை நாங்கள் பயன்படுத்த தீர்மானித்துள்ளோம். பிரதமர் அலுவலகத்துக்கான நிதியை நிறுத்துவது தொடர்பான யோசனையை நேற்று முன்வைத்துள்ளோம். சட்டரீதியான பிரதமர் ஒருவர் இல்லாத நிலையில ஏன் பிரதமர் அலுவலகத்துக்காக நிதியை நிறுத்த வேண்டும்

என்று கேட்கலாம். போலியான பிரதமர் மஹிந்த ராஜபக்ச பிரதமர் அலுவலகத்துக்கான அரச நிதியினை பயபன்படுத்துகின்றார்.

உலங்கு வானூர்திகளை பயன்படுத்துகின்றார். பிரதமர் அலுவலக பணியாளர்களை தமது சட்டவிரோதமான செயல்களுக்கு பயன்படுத்துகின்றார். அரச வாகனங்களையும் நிதியையும் பயன்படுத்துகின்றனர். தற்போதும், இந்த யோசனை நிறைவேற்றப்பட்ட பின்னரும் பிரதமரின் செயலாளர் மற்றும் அலுவலக பணியாளர்கள் அரச நிதியை ஒரு வாரம் பயன்படுத்தினாலும், குற்றமிழைத்தவர்கள் ஆவார்கள். அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். எனவே அவர்கள் தமது தனி்ப்பட்ட பணத்தை கொண்டு செவழித்த பணத்தை திருப்பிசெலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.

மஹிந்த ராஜபக்ச பயணிப்பதற்கு உலங்கு வானூர்தியை வழங்கினால் அதனை வழங்கியமைக்கு பிரதமரின் செயலாளர் மற்றும் அதிகாரிகள் பதில் சொல்ல வேண்டும். இவ்வாறு தொடர்ச்சியாக யோசனைகளை

முன்வைத்து இந்த சட்டவிரோத அரசாங்கத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவோம்”.

நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள குழப்பகரமான நிலைமைகளுக்கு பொறுப்புக்கூற வேண்டிய ஜனாதிபதியை உடனடியாக பிரச்சனைக்கு தீர்வு காணுமாறும், ஜனநாயகத்தை நிலைநாட்டுமாறும் வலியுறுத்தி

சாகும்வரையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டமொன்றை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.

நாட்டில் ஜனநாயகத்திற்காக குரல்கொடுத்துவரும் பொது அமைப்புக்களும் செயற்பாட்டாளர்களும் இந்த போராட்டத்திற்கு அழைப்புவிடுத்திருப்பதாக நேற்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அஜீத் பீ பெரேரா தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

மைத்திரி – மஹிந்த கூட்டே நாட்டை பேரழிவுக்கு தள்ளியது

Next Post

இலங்கையில் சிறுபான்மையினர் ஆபத்தில்!

Next Post

இலங்கையில் சிறுபான்மையினர் ஆபத்தில்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures