முன்னாள் ஜனாதிபமி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான மொட்டு சின்னத்தில் போட்டியிட பெருந்தொகையான முஸ்லிம்கள் விண்ணப்பித்துள்ளதாக அவ்வணியைச் சேர்ந்த அப்துல் சர்த்தார் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது தரப்பு தேர்தலுக்கு தயாராக உள்ளது. அரசாங்கத்தம் தேர்தலுக்குப் பயந்து அதனை ஒத்திவைத்து வருகிறது. இம்முறை தேர்தலில் எமது அணி ஒன்றில் பிரதேச ஆட்சியை பிடிக்கும். அல்லது பிரதான எதிர்த்தரப்பாக விளங்கும்.
தற்போது முஸ்லிம்கள் ஞானம் பெற்றுள்ளனர். பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம்கள் மஹிந்த அணியில் இணைய ஆரம்பித்துள்ளனர். தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கேட்டு வருகின்றனர்.
அவ்வளவு தூரம் மஹிந்த அணி மீதான நம்பிக்கை முஸ்லிம்களிடம் மீண்டும் செல்வாக்குச் செலுத்த ஆரம்பித்துள்ளது. பல பிரதேசங்களில் பட்டியல் பூரணப்படுத்தப்பட்டு விட்டபோதிலும் எமது கட்சி அலுவலகத்திற்கு வந்து அவர்கள் இடம்கேட்டு அடம்பிடிப்பதையுமு; அவதானிக்க முடிகிறது.
முஸ்லிம் கட்சிகளும், முஸ்லிம் கட்சித் தலைவர்களும் மஹிந்தவுடன் பேச்சு நடத்தியுள்ளனர் என்றார்.