மலையக ரயில் மார்க்கத்தில் ரம்புக்கன – பதுளை இடையிலான ரயில் சேவையில் நேற்று இரவு முதல் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு புகையிரத நிலையத்தில் இருந்து பதுளை நோக்கி சென்ற தபால் புகையிரதமும், பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற தபால் புகையிரதமும் நாவலப்பிட்டிய புகையிரத நிலையத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் காட்டுப்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் சிறுவர்கள் பெரியோர்கள் கர்ப்பிணி தாய்மார்கள் உள்ளிட்ட பயணிகள் தங்களின் வீடுகளுக்கு செல்ல முடியாமல் இரவு நேரத்தில் புகையிரதத்தினுள்ளே காத்திருந்ததாக பயணிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
உடனடியாக பயணிகளின் பாதுகாப்பு கருதி நாவலப்பிட்டி பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டதாக பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு பயணிகள் புகையிரத்திலேயே நித்திரை கொண்டதையும் அவதானிக்க முடிந்தது.
இதேவேளை பயணிகள் நலன் கருதி இன்று காலை முதல் அரச பேருந்து சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.