பதுளையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற இரவு தபால் புகையிரதம் ஒன்று தடம் புரண்டுள்ளதனால் மலையக ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
குறித்த ரயில் நாவலப்பிட்டி மற்றும் உலப்பனை ஆகிய புகையிரத நிலையங்களுக்கு இடையில் பல்லேகம எனும் பகுதியில் வைத்து இன்று அதிகாலை 1.30 மணியளவில் தடம்புரண்டுள்ளதாக நாவலப்பிட்டி புகையிரத அதிகாரிகள் தெரிவித்தனர். ரயிலின் மூன்று பெட்டிகளே இவ்வாறு தடம் புரண்டுள்ளது.
எனினும் அதில் பயணித்த பயணிகளையும், தபால் கடிதங்களையும் வேறொரு ரயிலுக்கு மாற்றி அனுப்பப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி ரயில் கட்டுப்பாட்டு நிலைய அதிகாரிகள் மேலும் தெரிவிக்கின்றனர்.
ரயில் பாதையை சீரமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும், அதன்பின் மலையக ரயில் சேவைகள் பாதிப்பில்லாமல் தொடரும் என அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.