ஈரான் அரசாங்கத்துடன் இணைந்து மலையகத்தில் இலவச வெளிவாரி பட்டப்படிப்பை ஏற்படுத்துவதற்கான கற்கை நிலையம் ஒன்றை அமைப்பதற்கான கூட்டம் ஒன்று பதுளையில் இன்று இடம்பெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் ஈரான் தூதரகத்தின் உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுன்ற உறுப்பினர் அரவிந்த் குமார் தெரிவித்துள்ளார்.
இதனூடாக அரசியல் விஞ்ஞானத்துறையில் வெளிவாரி பட்டப்படிப்பு ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும், கல்விப் பொதுத் தராதர உயர்தரத்தில் சித்தியடைந்தவர்கள் வயதெல்லை இன்றி இதில் கலந்துகொள்ள முடியும் என்றும் அரவிந்த் குமார் தெரிவித்துள்ளார்.

