மலேசியாவில் கப்பலொன்று கவிழ்ந்ததில் மாலுமியொருவர் உயிரிழந்ததுடன், 14 மாலுமிகள் காணாமல் போயுள்ளதாக, அந்நாட்டுக் கரையோரக் காவல் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
மலேசியாவுக்கு அப்பாலான மலாக்கா நீரிணையூடாக டொமினிக்கன் (Dominican) நாட்டுக் கொடியுடன் பயணித்துக்கொண்டிருந்த ஜே.பி.பி. ரொங் ஸாங்.8 (JBB RONG CHANG 8) எனும் மணற்சுரங்கக் கப்பலே நேற்று (புதன்கிழமை) விபத்துக்குள்ளானது.
இந்தக் கப்பலில் 18 மாலுமிகள் பயணித்த நிலையில், ஒருவர் உயிரிழந்ததுடன், 14 பேர் காணாமல் போயுள்ளனர்.
இதேவேளை, 3 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் கூறியுள்ளனர்.
மேலும், காணாமல் போன மாலுமிகளைத் தேடிக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.
மலேசியா மற்றும் இந்தோனேஷியாவைச் சேர்ந்த தலா இரு மாலுமிகளும் சீனாவைச் சேர்ந்த 16 மாலுமிகளும் கப்பலில் இருந்துள்ளனரென்பது குறிப்பிடத்தக்கது.