முழுமையான அரசியலமைப்பு மறுசீரமைப்பின் மூலமே நாட்டில் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் 20வது திருத்தச் சட்டம் என்ற தலைப்பில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே எழுத்தாளரும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதியுமான காமினி வியங்கொட இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “பல்வேறு இனங்கள் மற்றும் மதங்களை கொண்ட மக்கள் இந்த நாட்டில் வாழ்ந்து வருவதன் காரணமாக இந்த தேவை ஏற்பட்டுள்ளது.
முழுமையான அரசியலமைப்பு மறுசீரமைப்பின் மூலமே நாட்டில் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தியையும் ஏற்படுத்த முடியும்“ எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.