கடலட்டை பிடிப்பதற்கு எதிர்ப்புத்தெரிவித்து இன்று இடம்பெறவுள்ள போராட்டத்துக்கு பொலிஸார் அனுமதி மறுத்துள்ளனர். ஆயினும் திட்டமிட்டவாறு மருதங்கேணிப் பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் இன்று இடம்பெறும்.
இவ்வாறு யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளனத் தலைவர் வே.தவச்செல்வம் தெரிவித்தார்.
கடந்த சனிக்கிழமை கடலட்டையை பிடிப்பதை எதிர்த்து கலந்துரையாடலின் போது இந்த தீர்மானத்தின்போது இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துவதற்கான முன்னேற்பாடு செய்யப்பட்டுள்ளது.வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் சமாசத்தின் ஏற்பாட்டிலும் கடற்றொழிலாளர் சம்மேளனம் முற்றுமுழுதான ஆதரவுடனும் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏனைய சமாசங்களும் இணைய வேண்டும் என்று யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளனத் தலைவர் தவச்செல்வம் தெரிவித்தார்.