மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு முன்னர், நாட்டிலுள்ள எந்தவொரு வழக்கு விசாரணையையும் மூன்று வருடங்களுக்குள் நிறைவு செய்வதற்கு தேவையான சட்டத்தை கொண்டுவர வேண்டும் என அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டிலுள்ள பிரச்சினைகளை மரண தண்டனையினால் தீர்த்துவிட முடியாது. சட்டத்தை சரியாக செயற்படுத்த முடியாமல் உள்ளமைக்கே முதலில் தீர்வுகாண வேண்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நாட்டில் ஒரு வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்குவதற்கு குறைந்தது 17 வருடங்கள் தேவைப்படுவதாகவும், இதனால், குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு சட்டத்தில் உள்ள பயம் இல்லாமல் போயுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
மரண தண்டனைத் தீர்மானம் குறித்து ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.