வலிகாமம் வடக்கு மயிலிட்டி பகுதியில் அமைந்திருந்த இராணுவத்தினரின் பாரிய ஆயுத கிடங்கு அங்கிருந்து அகற்றப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
வலிகாமம் வடக்கில் கடந்த 13 ஆம் திகதி 683 ஏக்கர் காணி மீள்குடியேற்றத்திற்காக வழங்கப்பட்டது.இந்நிலையில் மயிலிட்டி வடக்கில் அமைந்தித்திருந்த இராணுவ ஆயுத கிடங்கு மற்றும் அதனுடன் இணைந்த கட்டடங்கள் இராணுவத்தினரால் இடித்து அழிக்கப்படுகிறது.
இந்நிலையில் அங்கு பொருத்தப்பட்ட கூரையின் இரும்புக் கேடர்களை இராணுவத்தினர் வாகனங்களில் எடுத்துச்செல்கின்றனர்.