மன்னார் மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் தொடர்பான ஆய்விற்காக அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்ட காபன் பரிசோதனை ஆய்வு அறிக்கை இன்று வெளியாகியுள்ளது.
கார்பன் பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ள நிலையில், எதிர்வரும் புதன்கிழமை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
குறித்த மனித புதைகுழியில் தொடர்ச்சியாகவும் மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சந்தேகத்திற்கிடமான சிறுபிள்ளை ஒன்றின் மனித எலும்புக்கூடு நேற்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த எலும்புக்கூடு முழுமையாக மீட்கப்பட்டு சுத்தப்படுத்துவதற்காக மத்திய பகுதியில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மன்னார் மனித புதைகுழியிலிருந்து இதுவரை 316 மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன், 307இற்கும் மேற்ப்பட்ட மனித எச்சங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

