மன்னார் மனிதப் புதைகுழியில் இருந்து தற்போது வரை 239 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதோடு, மேலும் பல எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
மன்னார் மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் இன்று 109 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டது.
மன்னார் நீதவான் ரி.சரவணராஜா வின் மேற்பார்வையில்,சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தலைமையில் அகழ்வு பணிகள் இடம் பெற்றது.
அகழ்வு பணிகள் இடம் பெற்று வரும் நிலப்பகுதி விஸ்தரிக்கப்பட்டுள்ள நிலையில், விஸ்தரிக்கப்பட்டுள்ள பகுதிகளிலும் மனித எலும்புக்கூடுகள் காணப்படுவதை அவதானிக்கக் கூடியாதாக உள்ளது
.
சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தலைமையில் குழுவினர் இணைந்து அகழ்வு பணிகளை மேற்கொண்டு வருவதோடு,அகழ்வு இடம் பெறும் இடத்தில் தேங்கி இருந்த மழை நீர் வெளியேற்றப்பட்டு தொடர்ச்சியாக அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.