நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர சபையின் தலைவராக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளில் ஒன்றான தமிழீழ விடுதலை இயக்கம்(டெலோ) கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஞானப்பிரகாசம் ஜெராட் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
மன்னார் நகர சபையின் தலைவர் தெரிவு தொடர்பான அவசர கலந்துரையாடல் நேற்றையதினம்(15-02-2018) வியாழக்கிழமை மாலை 3 மணியளவில் மன்னார் ஆஹாஸ் விடுதியில் இடம் பெற்றது.
இதன் போது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா , செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், சாள்ஸ் நிர்மலநாதன்,வடமாகாண அமைச்சர் எஸ். சிவநேசன் ,மாகாணசபை உறுப்பினர் எஸ்.பிரிமூஸ் சிறாய்வா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் மற்றும் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த கலந்துரையாடலின் போதே மன்னார் நகர சபையின் தலைவராக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளில் ஒன்றான தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) கட்சியின் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஞானப்பிரகாசம் ஜெராட் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.