மன்னாரில் மேற்கொள்ளப்பட்ட எச்.ஐ.வி தொற்றுநோய்ப் பரிசோதனையில் சுமார் 2ஆயிரத்து 500 பேர் வரையில் கலந்து கொண்டிருந்த போதும். எவருக்கும் அந்த நோய் இருப்பதாகக் கண்டறியப்படவில்லை என்று மன்னார் மாவட்ட சுகாதாரப் பணிப்பாளர் மருத்துவர் எஸ்.என்.கில்றோய் பீரிஸ் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தில் 10 இடங்களில் எச்.ஐ.வி தொற்றுநோய்க்கான பிரிசோதனைகள் அண்மையில் இடம்பெற்றன. இதில் பெருமளவபனமக்கள் கலந்து கொண்டு பரிசோதனைகளை மேற்கொண்டிருந்தனர்.
சுமார் 2ஆயிரத்து 500 பேர் வரையில் கலந்து கொண்டனர் உடனுக்குடன் முடிவுகள் அறிவிக்ககப்பட்டன. எவரும் நோயாளராக இனங்காணப்படவில்லை. அந்தப் பரிசோதனையின் மூலம் மன்னார் மாவட்டத்தில் வசிக்கும் அந்த நபர்கள் எய்ட்ஸ் நோய்ப் பரிசோதனைகளைச் செய்து கொள்வதோடு எய்ட்ஸ் நோய் சம்பந்தமான தெளிவைப் பெற்றுக் கொண்டுள்ளனர் என்று மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
