பெண்கள் ஐ.பி.எல். எனப்படும் முதலாவது மகளிர் பிரிமீயர் லீக் இருபது 20 கிரிக்கெட் போட்டிக்கான ஏலத்தில் உள்ளூர் வீராங்கனை ஸ்ம்ரித்தி மந்தனா அதிக விலைக்கு (3.4 கோடி இந்திய ரூபா) றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வாங்கியுள்ளது.
வீராங்கனைகளுக்கான ஏலம் மும்பை, பந்த்ரா-குர்லா கட்டடத் தொகுதியில் உள்ள ஜியோ சர்வதேச கூட்டரங்கில் திங்கட்கிழமை (13) நடைபெற்றது.
கடந்த வருடம்வரை பெண்களுக்கான இண்டியன் ப்றீமியர் லீக் என்ற பெயரில் நடத்தப்பட்டுவந்த போட்டி இந்த வருடத்திலிருந்து பெண்கள் பறீமியர் லீக் என்ற பெயரில் பிரமாண்டமாக நடத்தப்படவுள்ளது.
பெண்கள் பறீமியர் லீக் இருபது 20 கிரிக்கெட் போட்டி மும்பையில் மார்ச் 4ஆம் திகதியிலிருந்து 26ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.
இதனை முன்னிட்டு அஹமதாபாத், பெங்களூரு, டெல்லி, லக்னோ, மும்பை ஆகிய ஐந்து நகரங்களை அடிப்படையாக வைத்து 5 அணிகள் உருவாக்கப்பட்டு அவற்றை உரிமையாளர்கள் வாங்கியுள்ளனர்.
இந்த ஐந்து அணிகளுக்கும் 30 வெளிநாட்டு வீராங்கனைகள் உட்பட 90 வீராங்கனைகள் தேவைப்படுகின்றனர். இந்த 90 வீராங்கனைகளும் ஏலம் மூலம் ஐந்து அணிகளால் வாங்கப்படவுள்ளனர்.
ஏலப்பட்டியலில் இலங்கை உட்பட 15 நாடுகளை சேர்ந்த மொத்தம் 448 வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர். 269 பேர் இந்தியர்கள். 179 வீராங்கனைகள் வெளிநாட்டவர்கள். இவர்களில் 202 வீராங்கனைகள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய அனுபவசாலிகள் ஆவர்.
இந்த ஏலத்தில் முதலாவதாக இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்ம்ருதி மந்தானாவை ஏலத்தில் வாங்க மும்பையும் பெங்களூருவும் போட்டியிட்டன. இறுதியில் பெங்களூரு அணி இந்தியா நாணயப்படி 3 கோடியே 40 இலட்சம் ரூபாவுக்கு ஏலத்தில் எடுத்தது.
இந்திய அணித் தலைவி ஹார்மன்ப்ரீத் கோரை இந்திய நாணயப்படி ஒரு கோடியே 80 இலட்சம் ரூபாவுக்கு ஏலத்தில் மும்பை இண்டியன்ஸ் வாங்கியுள்ளது.
வெளிநாட்டு வீராங்கனைகளில் அவுஸ்திரேலிய சுழல்பந்துவீச்சாளர் ஏஷ்லி கார்ட்னரை 3 கோடியே 20 இலட்சம் ரூபாவுக்கு குஜராத் ஜயன்ட்ஸ் அணி ஏலத்தில் வாங்கியது.
இங்கிலாந்தின் நெட் சிவர் ப்ரன்டை இதே ஏல விலைக்கு மும்பை இண்டியன்ஸ் வாங்கியுள்ளது.
இலங்கை அணித் தலைவி சமரி அத்தபத்து அவரது சக அணி வீராங்கனைகளான அனுஷ்கா சஞ்சீவனி, இனோக்கா ரணவீர ஆகிய மூவரும் இந்திய நாணயப்படி 30 இலட்சம் ரூபா அடிப்படை விலையிலிருந்து ஏலத்தில் வாங்கப்படவுள்ளனர்.
ஏலத்தில் விற்கப்பட்ட வீராங்கனைகள்
(விலைகள் இந்திய நாணயத்தில்)
ஸ்ம்ரித்தி மந்தானா (றோயல் செலஞ்சர்ஸ் – 3.4 கோடி ரூபா)
ஹாமன்ப்ரீத் கோர் (மும்பை இண்டியன்ஸ் – 1.8 கோடி ரூபா)
சொஃபி டிவைன் (றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு – 50 இலட்சம் ரூபா)
ஏஷ்லி கார்ட்னர் (குஜராத் ஜயன்ட்ஸ் – 3.2 கோடி ரூபா)
எலிஸ் பெரி (றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் – 1.7 கோடி ரூபா)
சொஃபி எக்லஸ்டோன் (உத்தர பிரதேஷ் வொரியர்ஸ் – 2.6 கோடி ரூபா)
ரேணுகா சிங் (றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு – 1.5 கோடி ரூபா)
நட்டாலி சிவர் ப்ரன்ட் (மும்பை இண்டியன்ஸ் – 3.2 கோடி ரூபா)
தஹ்லியா மெக்ரா (உத்தர பிரதேஷ் வொரியர்ஸ் – ஒரு கோடி ரூபா)
அமேலியா கேர் (மும்பை இண்டியன்ஸ் – ஒரு கோடி ரூபா)
சொஃபியா டன்க்லி (குஜராத் ஜயன்ட்ஸ் – 60 இலட்சம் ரூபா)
ஜெமிமா ரொட்றிகஸ் (டெல்ஹி கெப்பிட்டல்ஸ் – 2.2 கோடி ரூபா)
மெக் லெனிங் (டெல்ஹி கெப்பிட்டல்ஸ் – 1.1 கோடி ரூபா)
ஷஃபாலி வர்மா (டெல்ஹி கெப்பிட்டல்ஸ் – 2 கோடி ரூபா)
அனாபெல் சதர்லண்ட் (குஜராத் ஜயன்ட்ஸ் – 70 இலட்சம் ரூபா)
ஹார்லீன் டியோல் (குஜராத் ஜயன்ட்ஸ் – 40 இலட்சம் ரூபா)
பூஜா வஸ்ட்ராகர் (மும்பை இண்டியன்ஸ் – 1.9 கோடி ரூபா)
டியேந்த்ரா டொட்டின் (குஜராத் ஜயன்ட்ஸ் – 60 இலட்சம் ரூபா)
யஸ்டிக்கா பாட்டியா (மும்பை இண்டியன்ஸ் – 1.5 கோடி ரூபா)
ரிச்சா கோஷ் (றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு – 1.9 கோடி ரூபா)
எலிசா ஹீலி (உத்தர பிரதேஷ் வொரியர்ஸ் – 70 இலட்சம் ரூபா)
அஞ்சலி சர்வாணி (உத்தர பிரதேஷ் வொரியர்ஸ் – 55 இலட்சம் ரூபா
ராஜேஷ்வரி கயக்வார்ட் (உத்தர பிரதேஷ் வொரியர்ஸ் – 40 இலடசம் ரூபா)