ஈரான் – அமெரிக்கா ஆகிய நாடுகளிடையே ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமைக்கு மத்தியில் மேலும் 3 ஆயிரம் படையினரை மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்புவதற்கு அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
விமானப் படையின் 82 ஆவது படைப்பிரிவின் அவசர படையணியினரும் இவர்களில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஈராக் நகரின் பக்தாதிலுள்ள அமெரிக்க தூதரகத்தை அடிப்படையாகக் கொண்டு ஏற்பட்ட பதற்றத்தை அடக்க அமெரிக்க ஏற்கனவே 750 படையினரை குவித்துள்ளது.
டிரம்பின் அரசாங்கத்தின் கீழ் மத்திய கிழக்கு நாடுகளில் மாத்திரம் சுமார் 14 ஆயிரம் படையினர் அமர்த்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் சுட்டிக்காட்டியுள்ளன.
மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்காவின் இந்த மேலதிக படை குவிப்பு நடவடிக்கையான அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான பதற்றத்தை மேலும் அதிகரிக்கச் செய்யும் என சர்வதேச அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

