விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தலித் மக்களுக்கு ஆதரவாக செயல்படும் வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள் மனித உரிமை ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம். அவர்கள் அனைவரையும் உடனே விடுதலை செய்ய வேண்டுமென மகாராஷ்டிர மாநில அரசையும் மத்திய அரசையும் வலியுறுத்துகிறோம். இந்த அடக்குமுறையை எதிர்த்துக் குரல் எழுப்ப அரசியல் கட்சிகளைக் கேட்டுக்கொள்கிறோம்.

