ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, சி.சி.டி.யின் உதவி பொலிஸ் அத்தியட்சர் பிரசன்ன அல்விஸ் ஆகியோரை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக கூறப்படும் விவகாரம் தொடர்பிலான விசாரணைகளின் ஒரு அங்கமாக, பாதாள உலக தலைவன் மாகந்துரே மதூஷிடம் விசாரணைகளை மேற்கொள்ள சி.ஐ.டி.யினர் தீர்மானித்துள்ளனர்.
அதன்படி குற்றப்புலனயவுப் பிரிவின் மூவர் கொண்ட விஷேட விசாரணை அதிகாரிகள் தற்சமயம் டுபாயில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மாகந்துரே மதூஷ் தொடர்பில் விசாரிக்க அங்கு செல்ல பெயரிடப்பட்டு அதற்காக ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளிடம் அனுமதிக்காக விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
இந்த விவகாரத்தில் முறைப்பாட்டாளராக கருதாப்ப்டும் ஊழல் ஒழிப்பு படையணியின் நடவடிக்கை பணிப்பாளர் நாமல் குமார, கைதாகி விளக்கமறியலில் உள்ள பயங்கரவாத புலனயவுப் பிரிவின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா ஆகியோருக்கு இடையிலான பல தொலைபேசி உரையாடல் பதிவுகளில் மதூஷின் பெயர் இடம்பெறுவது அவதனைக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த விசாரனைகளுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

