காற்று வெளியிடை படத்தை தொடர்ந்து மணிரத்னம் அடுத்தப்படியாக ஒரு படத்தை இயக்க தயாராகி வருகிறார். அரவிந்த்சாமி, ராம்சரண் தேஜாவை இணைத்து ஒரு படம் இயக்கப்போவதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின. இதையடுத்து மாதவன் – மணிரத்னம் கூட்டணி மீண்டும் இணைய இருப்பதாக ஒரு செய்தி வெளியானது.
இந்நிலையில் தற்போது மணிரத்னத்தின் புதிய படத்தில் விஜய்சேதுபதி நடிக்கயிருப்பதாக இன்னொரு புதிய செய்தி வெளியாகியுள்ளது. மணிரத்னம் அழைத்ததும் உடனடியாக அவருக்கு விஜய் சேதுபதி கால்சீட் கொடுத்து விட்டதாகவும், இதற்காக தான் ஏற்கனவே ஓகே பண்ணி வைத்திருந்த சில படங்களின் கால்ஷீட்டையும் கூட மாற்றியிருப்பதாக கூறப்படுகிறது.
அரவிந்த்சாமி, மாதவன், விஜய்சேதுபதி… இந்த மூவரில் மணிரத்னம் படத்தில் நடிக்கப்போவது யார்? என்பது விரைவில் அதிகாரப்பூர்வமாக தெரிந்துவிடும்.










