யாழ்ப்பாணம் மாநகர சபை மேயர் போட்டியில் வாக்கெடுப்பில் தோற்கடிக்கப்
பட்ட மணிவண்ணன் மீண்டும் ஆனோல்ட் உடன் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என்று விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் மாநகர சபையின் புதிய மேயரை தெரிவு செய்வதற்காக வடக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் தலைமையில் நேற்று சபையின் மண்டபத்தில் கூடியது.
புதிய மேயராகத் தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்ட இ.ஆர்னோல்ட் 18 வாக்குகளையும், தமிழ் தேசிய மக்கள் முன்னனி சார்பாக போட்டியிட்ட மணிவண்ணன் 13 வாக்குகளையும், ஈ.பி.டி.பி சார்பாக ரெமிடியஸ் 13 வாக்குகளையும் பெற்றனர்.
சட்ட ஒழுங்குளின் பிரகாரம் ஒரே வாக்குகளைப் பெற்ற இருவரில் ஒருவரை நீக்கி கூடுதல் வாக்குகளைப் பெற்ற நபருடன் இணைத்து மீண்டும் வாக்கெடுப்பு நடத்தத்தத் தீர்மானிக்கப்பட்டது. சம வாக்கு பெற்ற ரெமிடியஸ் மற்றும் மணிவண்ணன் ஆகியோரது பெயர்கள் எழுதப்பட்டு சீட்டு குலுக்கப்பட்டது. அதில் மணிவண்ணன் தோற்கடிக்கப்பட்டார்.
ஆனோல்ட்டுக்கும், ரெமிடியஸூக்கும் இடையே போட்டி நடத்தத் தீர்மானிக்கப்பட்டு சபையில் அறிவிக்கப்பட்டது. ரெமிடியஸ் மேயர் பதவிக்கான போட்டியில் இருந்து விலகுகின்றேன் என்று திடீர் என அறிவித்தார்.
அப்போது முன்னணி வேட்பாளர் மணிவண்ணன் தமக்கும் ஆணோல்ட்டுக்கும் இடையில் போட்டியை நடத்த வேண்டும் என்று கோரினார். நீங்கள் ஏற்கனவே தோற்கடிக்கப்பட்டவர்.
இவர்களுக்கு இடையில் இடம்பெற்ற போட்டியில் ரெமிடியஸ் விலகியமை அவரது உரிமை. மீண்டும் போட்டி நடத்த வேண்டிய தேவை இல்லை என வடக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் மணிவண்ணனின் கோரிக்கையை நிராகரித்தார்.