பிரேசில் நாட்டில் மணப்பெண்ணுடன் சென்ற ஹெலிகொப்டர் தரையில் மோதி விபத்துக்குள்ளானதில் வியக்கவைக்கும் வகையில் மணப்பெண் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.
குறித்த சம்பவத்தை நேரில் பார்த்த உறவினர்களும் விருந்தினர்களும் வாய்விட்டு அலறியுள்ளனர்.
திருமண விழாவுக்கு வந்திருந்த மொத்த விருந்தினர்களையும் குறித்த சம்பவம் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தாலும், திட்டமிட்டபடி திருமணம் மிக விமரிசையாக நடந்து முடிந்துள்ளது.
பிரேசிலின் சாவோ பவுலோ நகரில் சனிக்கிழமை குறித்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
திருமணத்தை விமரிசையாக நடத்த திட்டமிட்ட மணப்பெண்ணின் வீட்டார், ஹெலிகொப்டர் ஒன்றை வாடகைக்கு அமர்த்தி, அதில் மணப்பெண் மற்றும் உறவினர்கள் நான்கு பேர் என 5 பேருடன் திருமணம் நடைபெறும் தேவாலயத்திற்கு சென்றுள்ளனர்.
இந்த நிலையில் திடீரென்று ஏற்பட்ட தொழிற்நுட்ப கோளாறு காரணமாக, ஹெலிகொப்டர் தரை இறங்குவதில் சிரமப்பட்டுள்ளது.
விமானி பலமுறை முயற்சித்தும் உரிய முறையில் தரையிறக்க முடியாமல் போனது.
இதனையடுத்து தரையில் மோதியபடியே ஹெலிகொப்டர் தரையிறங்கியுள்ளது. மோதிய வேகத்தில் குறித்த ஹெலிகொப்டர் தீப்பற்றிக் கொண்டுள்ளது.
இதனையடுத்து ஏற்கெனவே அசம்பாவிதங்களை தவிற்க ஏற்பாடு செய்திருந்த மீட்புக் குழுவினரின் உதவியுடன் மணப்பெண் உள்ளிட்ட உறவினர்களை மீட்டுள்ளனர்.
இதில் மணப்பெண்ணுக்கு மட்டும் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளது.
ஹெலிகொப்டர் தீபற்றி எரியும் முன்னரே உறவினர்களும் மணப்பெண்ணும் அதில் இருந்து தப்பியது உயிர் சேதங்களை தவிர்த்துள்ளதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.