மட்டக்களப்பு மாவட்ட செயலக கணக்காய்வு முகாமைத்துவ குழுக்கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமாகிய கலாமதி பத்மராஜா தலைமையில் அரச அதிபரின் ஒன்றுகூடல் மண்டபத்தில் குறித்த கூட்டம் நடைபெற்றுள்ளது.
இதன்போது, மாவட்டத்தின் கணக்காய்வு முகாமைத்துத்தினை எவ்வாறு சிறந்த முறையில் முன்கொண்டு செல்வது என்பது தொடர்பாக ஆராயப்பட்டது.
மேலும், திணைக்களங்களில் நிதியினை எவ்வாறு கையாள்வது அதனை முன்னெடுப்பதில் உள்ள சிக்கல் தொடர்பாக ஆராயப்பட்டு, தீர்வுகளும் காணப்பட்டது.
அத்துடன், திணைக்களங்களில் பணியாற்றும் உத்தியோகத்தர்களின் பயணக் கொடுப்பனவுகள் தொடர்பாக ஏற்படுகின்ற நடைமுறை சிக்கல்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளது.
குறித்த கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர்களான சுதர்ஷ்சி ஸ்ரீகாந், நவரூபரஞ்சனி முகுந்தன், மாவட்ட செயலகத்தின் பிரதம கணக்காளர் க.ஜெகதீஸ்வரன், திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி, உதவி மாவட்ட செயலாளர் ஏ.நவேஸ்வரன், கணக்காளர் எஸ்.வினோத் மற்றும் பிரிவுகளின் பகுதி தலைவர்கள் கலந்து கொண்டு தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர்.

