Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மட்டக்களப்பு மாவட்டத்துக்கு நான்கு தமிழ் எம்.பிக்கள் வேண்டும்!

March 9, 2020
in News, Politics, World
0
மட்டக்களப்பு மாவட்டத்துக்கு நான்கு தமிழ் எம்.பிக்கள் வேண்டும்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் விகிதாசார அடிப்படையில் 4 தமிழ் நாடாளுமன்றப் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கு தமிழ் மக்கள் தயாராக வேண்டும் என்று கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் இரா.துரைரெத்தினம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இந்த மாவட்டத்தைப் பொறுத்தவரையில் கடந்த காலங்களில் இரு தடவைகள் நாடாளுமன்றத் தேர்தலில் 4 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

பல தடவைகள் தேர்தல்களில் நாம் விகிதாசாரத்துக்கு ஏற்றவாறு தமிழ் பிரதிநிதித்துவம் பெறவில்லை என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டும்.

இந்த மாவட்டத்துக்கான 5 வேட்பாளர்களில் 4 தமிழ் நாடாளுமன்றப் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட வேண்டும்.

இனவாத அரசின் கைக்கூலிகள் வாக்குகளைப் பிரிப்பதற்காகத் தேர்தலில் வேட்பாளர்களாக இறங்கித் தமிழ் வாக்குகளைப் பிரிப்பதாலேயே தமிழர்களுடைய நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் குறைகின்றது.

தமிழர்களாகிய நாங்கள் 4 நாடாளுமன்ற தமிழ்பிரதிநிதிகளைப் பெறவேண்டுமாயின் கடந்த காலத்தில் விட்ட தவறுகளை இந்தத் தேர்தலிலும் விட்டுவிடக் கூடாது. முதலில் ஒற்றுமையாகத் தேர்தலில் களமிறங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Previous Post

கூட்டணியின் தலைவர் யார் என்பதில் சர்ச்சை

Next Post

கட்டார் செல்லும் 14 நாடுகளை சேர்ந்த பயணிகளுக்கு தடை

Next Post
கட்டார்  செல்லும் 14 நாடுகளை சேர்ந்த பயணிகளுக்கு தடை

கட்டார் செல்லும் 14 நாடுகளை சேர்ந்த பயணிகளுக்கு தடை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures