யாழ்ப்பாணம், செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணையைக் கோரி தனிநபர் முன்வைத்த பிரேரணை மட்டக்களப்பு மாநகரசபை ஆதரவு வழங்கியுள்ளது.
மட்டக்களப்பு மாநகரசபையின் இரண்டாவது சபை அமர்வு இன்று வியாழக்கிழமை (17) நடைபெற்றது.
இதன்போது, துரைசிங்கம் மதன் என்ற உறுப்பினர் செம்மணி புதைக்குழிக்கு சர்வதேச விசாரணை கோரி தனிநபர் பிரேரணையை முன்வைத்தார்.
இதற்கு தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த 9 உறுப்பினர்களும் சபையில் இருந்த அனைவரும் ஆதரவு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.