மட்டக்களப்பு தாந்தாமலை, கண்டியநாறு பகுதியை அண்டிய குளத்தருகில் மறைத்து வைக்கப்பட்ட கோடா பரல்களுடன் சந்தேக நபர் ஒருவரை கொக்கட்டிச்சோலை பொலிஸார் இன்று (8) கைது செய்துள்ளனர்.
பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய கொக்கட்டிச்சோலை பொலிஸார் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டபோது குறித்த நபர் சுற்றிவளைக்கப்பட்டார்.
இதன்போது 1,80,000 மில்லி லீட்டர் அளவுடைய ஒரு பரலுடன், உன்னிச்சை பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
மேலும், 10 கோடா பரல்களும் 12 வெற்றுப் பரல்களும் கசிப்பு தயாரிக்க பயன்படுத்தப்படவிருந்த நிலையில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன. கைதான சந்தேக நபரை கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.