இலங்கையில் சிவில் விமானப் போக்குவரத்து சேவைக்கான விமான நிலையம் மட்டக்களப்பில் திறந்துவைக்கப்பட்டது.
விமானப்படையின் கட்டுப்பாட்டில் கடந்த 25 ஆண்டுகளாக இருந்த மட்டக்களப்பு விமான நிலையம், சிவில் விமானப் போக்குவரத்துக்காக நேற்று (25) போக்குவரத்து, சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் திறந்துவைக்கப்பட்டது.
மட்டக்களப்பு விமான நிலையத்தில் இருந்து இரத்மலானை விமான நிலையத்துக்கு உள்ளூர் விமான சேவைகளை ஆரம்பிக்க பல்வேறு விமான சேவை நிறுவனங்கள் முன்வந்துள்ளன.
இதன்போது மட்டக்களப்பு விமான நிலையத்திற்குரிய இணையத்தளம் திறந்துவைக்கப்பட்டதுடன் மத்தள, கட்டுநாயக்க, மட்டக்களப்பு விமான நிலையங்களை இணைத்து மேற்கொள்ளப்படவுள்ள விமான சேவைகளுக்கான ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு விமான நிலையத்தில் இருந்து ஞாயிறு, வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளின் விமானப்பயணங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.