மட்டக்களப்பு புற நகர்ப்பகுதியான பிள்ளையாரடி பிரதேசத்தில் அமைந்துள்ள வீதி அபிவிருத்தி அதிகார சபையின் சுற்று மதிலில் இலங்கையின் அபிவிருத்தி புராதன நிகழ்வுகளை சித்தரிக்கின்ற ஓவியங்கள் வரையப்பட்டிருந்த சுற்றுமதில் ஓவியங்களை நேற்று (05) வைபவரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபை பொறியியலாளர் என்.சசிநந்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் பொறியியலாளர் கே.சிவநாதன் பிரதம விருந்தினராக் கலந்து கொண்டு சுவரோவியங்களை திறந்து வைத்தார்.
மட்டக்களப்பு நகரிலுள்ள பொலிஸ் விடுதி மதில்கள், வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவர்களிலும் ஓவியங்கள் வரையப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

