‘மஞ்சும்மல் பொய்ஸ்’ எனும் வணிக ரீதியான வெற்றி திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் உருவாகும் ‘பாலன்’ எனும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.
கே வி என் புரொடக்ஷன்ஸ் மற்றும் தெஸ்பியன் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் வெங்கட் கே. நாராயணா மற்றும் திருமதி சைலஜா தேசாய் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் ‘பாலன்’ திரைப்படத்திற்கு ஷைஜூ காலித் ஒளிப்பதிவு செய்ய சுசின் ஷியாம் இசையமைக்கிறார்.
கே வி என் புரொடக்ஷன்ஸ்- இயக்குநர் சிதம்பரம் ஆகியோர் இணைந்திருப்பதால் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.