இந்துஜா டிவிட்டரில் புதிய புகைபடங்களை வெளியிட்டு உள்ளார். மஞ்சள் நிறம் ஆடையில் சும்மா ஸ்டைலாக போஸ் கொடுத்ததை பார்த்து சொக்கிப்போன ரசிகர்கள் மஞ்சள் நிற அழகே, மஞ்சள் காட்டு மைனா என்று ஏகத்திற்கும் புகழ்ந்து வருகின்றனர். மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் இந்துஜா. அந்த திரைப்படத்தில் வைபவ்ற்கு தங்கையாக நடித்திருப்பார். அந்த படத்தில் ஒரளவிற்கு பேசப்படும் முகமானார். இதையடுத்து மெர்க்குரியில் நடித்து இருப்பார் இது அவருக்கு இரண்டாவது படமாகும்.
ஆர்யா உடன் மகாமுனி படத்தில் அவருக்கு கதாநாயகியாக நடித்து இருப்பார். தன்னுடைய கதாபாத்திரம் உணர்ந்து மிகவும் நேர்த்தியாக நடித்து இருப்பார். அடுத்து விஜய்யுடன் பிகில் படத்தில் நடித்துள்ளார் இந்துஜா. பிகில் படத்தில் வேம்பு கதாபாத்திரம் அவருக்கு கச்சிதமாக பொருந்தி இருந்தது.
பிசியான நேரத்திலும் அடிக்கடி போட்டோஷுட்கள் எடுப்பது அதை ட்விட்டரில் பதிவேற்றுவது என்று எப்போதும் ஆக்டிவாக இருப்பார். மேலும் இவர் பதிவிடும் புகைப்படத்திற்கு லைக் போடவும், அதை ரசித்து கவிதை எழுதவும் ஒரு கூட்டமே இவருக்குஉண்டு, இந்துஜா நேற்று டிவிட்டர் பக்கத்தில் புதிய புகைபடங்களை வெளியிட்டு உள்ளார். மஞ்சள் நிறம் ஆடையில் சும்மா ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த சொக்கிப்போன ரசிகர்கள் மஞ்சள் நிற அழகே, மஞ்சள் காட்டு மைனா என்று ஏகத்திற்கும் புகழ்ந்து லைக்குகளை போட்டு தாக்குகின்றனர்.
பல நடிகைகள் எப்போதும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். ஆனால், இந்துஜா அப்படி அல்ல என்று அவரின் ரசிகர்கள் பெருமை உடன் டிவிட்டரில் கூறிவருகின்றனர். இந்த ஆண்டு இவருக்கு வெற்றி ஆண்டாக அமைந்தது அடுத்த ஆண்டும் அவருக்கு நிறைய படங்கள் வர வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு,

