நல்லூர் கோயில் பகுதியில் நான் மதுபோதையில் நின்றிருந்தேன். அப்போது எனது மச்சான் ( முதலில் கைதாகி உள்ளவர்), உந்தப் பொலிஸை (நீதிபதியின் மெய்ப்பாதுகாவலர்) உன்னால் சுடமுடியுமா என்று சவால் விட்டார்.
நான் சும்மா அவரது பிஸ்டலை எடுத்தேன். அது சுடுபட்டு விட்டது என்றார் நீதிபதி இளஞ்செழியனின் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்பு என இன்று(25) காலை சரணடைந்த பிரதான சந்தேக நபர் வாக்குமூலம் வழங்கியுள்ளதாகப் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.செல்வராசா ஜயந்தன் (39) என்ற பிரதான சந்தேகநபர் 1994ஆம் ஆண்டு விடுதலை புலிகள் அமைப்பில் இணைந்துள்ளார்.
அதன் பின்னர் 2004 இல் அந்த அமைப்பிலிருந்து விலகியிருந்தார்.2012ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட செல்வராசா ஜயந்தன், பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.அவ்வாறு பிணையிலுள்ள நிலையிலேயே அவர் இந்த துப்பாக்கி பிரயோக சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
															