Saturday, August 23, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Cinema

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசனின் அதிரடி அறிவிப்பு

November 12, 2024
in Cinema, News, World, இந்தியா, முக்கிய செய்திகள்
0
இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு நிபந்தனைகளற்ற ஆதரவு | கமல்ஹாசன்

தன்னை ‘உலகநாயகன்’ என்றோ அல்லது அடைமொழி பட்டங்கள் கொடுத்தோ அழைக்க வேண்டாம் என தென்னிந்திய நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல் ஹாசன் (Kamal Haasan)  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சமூக வலைத்தளமாக எக்ஸ் (x) ல் அறிக்கையொன்றை வெளியிட்டு இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

உலக நாயகன்

குறித்த அறிக்கையில், “என் மீது கொண்ட அன்பினால் ‘உலக நாயகன்’ உட்பட பல பிரியம் ததும்பும் பட்டங்களால் என்னை அழைக்கிறீர்கள்.

உங்கள் நான்,

கமல் ஹாசன். pic.twitter.com/OpJrnYS9g2— Kamal Haasan (@ikamalhaasan) November 11, 2024

மக்கள் கொடுத்து, சக கலைஞர்களாலும் ரசிகர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இப்படிப்பட்ட பாராட்டுச் சொற்களால் மகிழ்ந்திருக்கிறேன். உங்கள் இந்த அன்பால் நெகிழ்ந்துமிருக்கிறேன். உங்களின் பிரியத்தின் மீது எனக்கு மாறாத நன்றியுணர்வும் உண்டு.

சினிமாக் கலை, எந்த ஒரு தனி மனிதனையும் விட பெரியது. அந்தக் கலையில் மேலும் மேலும் கற்றுக்கொண்டு பரிணாமம் அடைய விரும்பும் ஒரு மாணவன் தான் நான். பிற கலைகளைப் போலவே சினிமாவும் அனைவருக்குமானது; அனைவராலுமானது.

திறமையான கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், நல்ல ரசிகர்கள் ஒன்றிணைந்துதான் சினிமா உருவாகிறது.

கோரிக்கை

கலையை விடக் கலைஞன் பெரியவன் இல்லை என்பது என் ஆழமான நம்பிக்கை. கற்றது கைம்மண் அளவு என்பதை உணர்ந்தவனாகவும், தொடர்ச்சியான முன்னகர்வில் நம்பிக்கை உழைத்துயர்பவனாகவும் இருப்பதே எனக்கு உவப்பானது. அதனால்தான் நிறைய யோசனைக்குப் பிறகு ஒரு முடிவுக்கு வர நேர்ந்தது.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசனின் அதிரடி அறிவிப்பு | Actor Kamal Hassan Declines Titles Ulaganayagan

மேலே குறிப்பிட்டது போன்ற பட்டங்களையும் அடைமொழிகளையும் வழங்கியவர்களுக்கு எந்த மரியாதைக் குறைவும் வந்து விடாத வண்ணம் அவற்றைத் துறப்பது என்பதே அது.எனவே, என் மீது பிரியம் கொண்ட அனைவருக்குமாக ஒரு வேண்டுகோள் வைக்கிறேன்.

இனிவரும் காலத்தில் என் ரசிகர்களும் ஊடக நண்பர்களும் திரைத்துறையைச் சார்ந்தவர்களும், மக்கள் நீதி மய்யம் (Makkal Needhi Maiam) கட்சித் தொண்டர்களும், சக இந்தியர்களும் என்னை கமல்ஹாசன் என்றோ கமல் என்றோ KH என்றோ குறிப்பிட்டால் போதுமானது என்று கேட்டுக்கொள்கிறேன். என குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

‘குளோபல் ஸ்டார்’ ராம்சரண் நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’ படத்தின் கிளர்வோட்டம் வெளியீடு

Next Post

தமிழ் மக்களின் நெஞ்சில் தமிழ் தேசியம் இன்றும் அடைகாக்கப்பட்டிருக்கிறது – பொ. ஐங்கரநேசன் 

Next Post
ஜே.வி.பியா தமிழ் மக்களுக்கான தீர்வைத் தரப்போகின்றது? | பசுமை இயக்கத் தலைவர்

தமிழ் மக்களின் நெஞ்சில் தமிழ் தேசியம் இன்றும் அடைகாக்கப்பட்டிருக்கிறது - பொ. ஐங்கரநேசன் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures