‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி – மலையாள நடிகர் ஜெயராம் ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் ‘காதல் கதை சொல்லவா’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
இயக்குநர் கே. சனில் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காதல் கதை சொல்லவா’ எனும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ஜெயராம், ரமேஷ் திலக், ரித்திகா சென் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஷாஜன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷாரெத் இசையமைத்திருக்கிறார். தயாரிப்பாளர் ஆகாஷ் அமாயா ஜெயின் தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்தை பெப்பர்மின்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் வழங்குகிறது.
‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி மலையாளத்தில் அறிமுகமான ‘மார்க்கோனி மத்தாய்’ எனும் திரைப்படத்தை தமிழுக்காக சில மாற்றங்களை செய்து மறு உருவாக்கம் செய்திருக்கிறார்கள் என திரையுலக வணிகர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

