தேர்தல் நடைபெறாமல் இருப்பதையிட்டு அல்ல நான் கவலைப்படுவது எனவும் மக்களின் வாக்குரிமை இழுத்தடிப்புச் செய்யப்படுவதையிட்டே நான் அதிகம் கவலைப்படுகின்றேன் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
கூட்டு எதிரணியின் உறுப்பினர்களுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
மாகாண சபைத் தேர்தலை பழைய முறைப்படி நடாத்துவதே மிகவும் சிறந்தது எனவும் நீதிமன்றத்தினூடாகவாவது தேர்தலை நடாத்துவதற்கான நடவடிக்கையை யாராவது எடுப்பாராயின் வரவேற்கத்தக்கது எனவும் அவர் மேலும் அறிவித்தார்.

