ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அறிவிக்கப்பட்ட அனைத்து வரி நிவாரணங்களும் இன்று முதல் வழங்கப்படுவதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளர்.
மக்களின் நன்மை கருதி இன்று முதல் வரி நிவாரணங்கள் அமுல்படுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் 15 வீதமாக இருந்த வற் வரி 8 வீதமே அறவிடப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஏனைய குறிப்பிடப்பட்ட வரி திருத்தம், வரி நிவாரண யோசனை இன்று முதல் செயற்படுத்தப்படும் என அவர் கூறியுள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போது அமைச்சர் இந்தத் தகவலை வெளியிட்டார்.

