ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம், பொது மக்களினால் முன்வைக்கப்படும் முறைப்பாடுகளால் அரச அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பொது மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் பல அரசாங்க ஊழியர்கள் செயற்படுவதாக ஜனாதிபதியிடம் முறைப்பாடுகள் குவிய ஆரம்பித்துள்ளன.
அண்மையில் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்திற்கு ஜனாதிபதி திடீர் விஜயம் மேற்கொண்டிருந்தார். அங்கு பொறுப்பற்ற வகையில் முன்னெடுக்கும் செயற்பாடுகள் தொடர்பில் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதனையடுத்து உரிய முறையில் சேவை முன்னெடுக்கப்படாத அரசாங்க நிறுவனங்கள் தொடர்பில் ஜனாதிபதியிடம் பெருமளவு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி செயலகத் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தேனீர் அருந்து நேரம், உணவு சாப்பிடும் நேரம் என கூறி பொது மக்களுக்கு தாமதம் ஏற்படுத்தும் அரச ஊழியர்கள் தொடர்பில் ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாடுகளுக்கு அமைய குறித்த அரச நிறுவனங்களுக்கு ஜனாதிபதி திடீர் விஜயங்களை மேற்கொள்ளத் தயாராகி உள்ளதாக தெரிய வருகிறது. இதன் காரணமாக பல அரசாங்க ஊழியர்கள் கடும் அச்சத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

