நாட்டு மக்களிடமிருந்து கிடைத்திருக்கும் செய்திக்கு ஏற்ப அரச நடவடிக்கைகளில் தேவையான மாற்றங்களை மேற்கொண்டு, நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் மேற்கொள்ள வேண்டிய நிகழ்ச்சித் திட்டங்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையைக் கருத்தில்கொண்டே ஜனாதிபதி இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை மறுசீரமைப்பின் பின்னர் புதிய அமைச்சர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தார் மைத்திரி.
”ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்களின் மறுசீமைப்பை எதிர்வரும் இரண்டு வார காலப்பகுதியில் மேற்கொள்ள எதிர்பார்க்கின்றேன் என்றும், அரச கூட்டுத்தாபனம், சட்டவாக்க சபைகளின் நடவடிக்கைகளை வினைத்திறன்மிக்க வகையில் மேற்கொள்வதற்குத் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்” என்றும் அவர் தெரிவித்தார்.