நபர் ஒருவர் மூன்று காவல்துறை அதிகாரிகளை மகிழுந்தால் மோதி காயமேற்படுத்தியுள்ளார். வியாழக்கிழமை நள்ளிரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வியாழக்கிழமை இரவு Montpellier நகரில் உள்ள Avenue Assas பகுதியில் தேசிய காவல்துறையினர் கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். நள்ளிரவு 12.10 மணி அளவில் மகிழுந்து ஒன்றை காவல்துறையினர் நிறுத்தியுள்ளனர். வழக்கமான விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர் குறித்த மகிழுந்தை ஓட்டிவந்த நபரிடம் சரியான காப்புறுதி பத்திரமோ, போதிய அடையாள அட்டைகளோ இல்லை என்பதையும், அவர் வழங்கிய பெயர் இருப்பிடம் போன்ற தகவல்களும் போலி என்பதை உணர்ந்துள்ளனர். அதற்குள்ளாக மகிழுந்தை பின்பக்கமாக எடுத்த சாரதி, மீண்டும் முன்நோக்கி வந்து காவல்துறையினரை மோதி தள்ளிவிட்டு தப்பிச்சென்றுள்ளான்.
காவல்துறையினரின் மகிழுந்திகும் இடித்து சேதமாக்கிவிட்டு, குறித்த 26 வதுடைய நபர் தப்பிச்சென்றுள்ளான். அதைத் தொடர்ந்து மற்றுமொரு மகிழுந்துடனும் சிறிது நேரத்தில் மோதியுள்ளான். இச்சம்பவத்தில் மூன்று காவல்துறை அதிகாரிகளும் காயமடைந்துள்ள்ணர். ஒருவருக்கு தோள்மூட்டில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது. விசாரணைகள் தொடர்கின்றது. குறித்த நபர் இதுவரை கைது செய்யப்படவில்லை என்ற போதும், அது ஒரு திருடப்பட்ட மகிழுந்து என தெரிவிக்கப்பட்டுள்ளது.

