மகிந்த ராஜபக்ச மனம் வருந்தி எமது உறவுகளை விடுவித்தால் ஏற்றுக்கொள்வோம் என லீலாதேவி தெரிவித்துள்ளார்
முன்னைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச காலத்தில் எமது உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டார்கள்.
இந்த ஜனாதிபதி காலத்தில் அதற்கு நீதி கேட்டு போராடி வருகின்ற நிலையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தமிழ் மக்களுக்கு கடந்த காலத்தில் இழைத்த துரோகங்களுக்கும், தவறுகளுக்கும் மனம் வருந்தி எமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை மீட்டுத்தந்தால் நாம் அதனை ஏற்றுக்கொள்வோம்.
எங்களுக்கு தேவை எங்களின் பிள்ளைகளே என கிளிநொச்சியில் காணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவினர் சங்கத்தின் இணைப்பாளரான லீலாதேவி ஆனந்தநடராஜா தெரிவித்துள்ளார்