முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பெண் ஜோதிடர் ஒருவரை தேடிச் சென்றதாக, சிங்கள ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இதற்கு முன்னர், இலங்கை கிரிக்கெட் அணியினால், பெண் ஜோதிடர் ஒருவர் பிரபல்யம் அடைந்துள்ளார்.
இந்நிலையில் குறித்த ஜோதிடரை பார்வையிடுவதற்காக மஹிந்த சென்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கான கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ள முன்னர், இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் தினேஷ் சந்திமால், குறித்த பெண் ஜோதிடரை சந்தித்திருந்தார்.
பாகிஸ்தான் அணியை வெற்றி கொள்ளும் நோக்கில் ஆசிர்வாதம் வழங்கிய ஜோதிடர், மந்திரீக தாயத்தையும் வழங்கியிருந்தார்.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரு டெஸ்ட் போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில் குறித்த பெண் ஜோதிடரை, மஹிந்த ராஜபக்ஷ சென்று பார்வையிட்டுள்ளதாக தெரிய வருகிறது.
இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
எனினும் குறித்த பெண் ஜோதிடரை சந்திக்க மஹிந்த சென்றமைக்கான காரணம் இன்னமும் வெளியாகவில்லை.
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜோதிடத்தின் மீது அதீத நம்பிக்கை உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.