ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நாய்களும் சாப்பிட முடியாத முந்திரி பருப்புகளை வழங்கிய ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் முன்னாள் ஜனாதிபதி மகிந்தவுக்கு தரமான முந்திரி பருப்புகளை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு இரண்டு நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாடு திரும்பியுள்ளார்.
மகிந்த ராஜபக்ச உட்பட பிரதிநிதிகள், இந்தியாவில் இருந்து ஸ்ரீலங்கன் விமானம் மூலம் இலங்கை வந்துள்ளனர்.
விமானத்தில் வரும் போது முன்னாள் ஜனாதிபதி உட்பட பிரதிநிதிகளுக்கு விமான நிறுவனம் முந்திரி பருப்புகளை வழங்கியதாகவும் அது மிகவும் சிறந்த தரமான முந்திரிகளாக இருந்தன எனவும் முன்னாள் ஜனாதிபதியுடன் விமானத்தில் வந்த இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி உட்பட தமக்கு வழங்கப்பட்ட முந்திரி பருப்புகள் தரமானவையாக இருந்ததாகவும் அவற்றில் எந்த குறையும் இருக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேபாளத்தில் இருந்து இலங்கை வரும் போது, ஸ்ரீலங்கன் விமானதத்தில் வழங்கப்பட்ட முந்திரி பருப்புகள் நாய்களுக்கு கூட சாப்பிட முடியாத படி இருந்ததாக குற்றம் சுமத்தியிருந்தார்.