இலங்கை அரசியலில் திடீர் பரபரப்பை உண்டாக்கி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் புதிய பிரதமராக சத்தியப்பிரமானம் செய்துகொண்டார் இலங்கையின் முன்னார் அதிபர் மகிந்த ராஜபக்ஷ.
இந்நிலையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள திடீர் அரசியல் மாற்றம் குறித்து பல தரப்புக்களும் கருத்துத் தெரிவித்து வருகின்ற நிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை வழங்கிய வாக்குறுதிகளை ஞாபகமூட்டியுள்ளது அமெரிக்கா.
அமெரிக்காவின் வெளியுறவுத்துறை தெற்காசிய மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான பணியகம் தனது டுவிட்டர் பதிவில் இவ் விடயத்தை தெதரிவித்துள்ளது.
அத்தோடு அனைத்துக் கட்சிகளும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் அமெரிக்கா வேண்டியுள்ளதுஅமெரிக்காவின் வெளியுறவுத்துறை தெற்காசிய மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான பணியகம் தனது டுவிட்டர் பதிவில் இவ் விடயத்தை தெதரிவித்துள்ளது. அத்தோடு அனைத்துக் கட்சிகளும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் அமெரிக்கா வேண்டியுள்ளது.