Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மகாளய பட்சம் | வழிபட வேண்டிய முறை

September 22, 2021
in News, ஆன்மீகம்
0
மகாளய பட்சம் | வழிபட வேண்டிய முறை

நாம் மகாளயபட்சமான 15 நாட்களும் மகாளய அமாவாசை தினத்தன்றும் கண்டிப்பாக மறைந்த நம் முன்னோர்களை நினைத்து வழிபட வேண்டும். உரிய நாளில், உரிய வகையில் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.

இன்று (செவ்வாய்க்கிழமை) மகாளய பட்சம் தொடங்குகிறது.

வாழ்க்கையில் நம்மை நாமே உயர்த்திக் கொள்ள உதவும் வழிபாடுகளில் மகாளய பட்சம் வழிபாடுதான் முதன்மையானது. மிகவும் எளிதானது. ஆண்டுக்கு ஒரு தடவைதான் நமக்கு இந்த வழிபாட்டுக்கான வாய்ப்பு கிடைக்கும். மகாளய பட்சம் வழிபாடு என்பது பித்ருக்களான மறைந்த நம் முன்னோர்களை நினைத்து வழிபட வேண்டிய ஒன்றாகும்.

நம்மை பெற்றவர்கள், தாத்தாக்கள், பாட்டிகள் மற்றும் இதர முன்னோர்கள் மறைந்த பிறகு அவர்கள் தெய்வத்துக்கு சமமாக மாறி விடுகிறார்கள். இந்த பிரபஞ்சத்தில் அவர்களுக்கென்றே பித்ருலோகம் உள்ளது. மரணத்துக்கு பிறகு அங்கு சென்று விடும் நம் மூதாதையர்கள், பாவ-புண்ணியத்துக்கு ஏற்ப அங்கிருந்து கொண்டு நமக்கு அருளாசி வழங்கி வருகிறார்கள்.

பொதுவாக பெற்றோர் மறைந்த பிறகு, பெரும்பாலானவர்கள் அவர்களை மறந்து விடுகிறார்கள். சிலர் 3-வது நாள் விசேஷம், 16-வது நாள் காரியம் என்று செய்த பிறகு கடமை முடிந்து விட்டதாக நினைக்கிறார்கள். பிறகு ஆண்டுக்கு ஒரு தடவை, அவர்கள் இறந்த நாளில், அவர்கள் விரும்பி சாப்பிடும் உணவை சமைத்து அவர்களுக்கு படையல் போட்டு கும்பிடுவார்கள்.

அப்புறம் ஆடி அமாவாசை, தை அமாவாசை நாட்களில் போட்டோவுக்கு மாலை போட்டு கும்பிட்டு விட்டு திருப்திபட்டுக் கொள்வார்கள். நாளடைவில் அந்த வழிபாடும் சுரத்து இல்லாமல் போய் விடுவதுண்டு. அதன்பிறகு அவர்களுக்கு முன்னோர் வழிபாடு என்பது ஏதோ வருடத்துக்கு ஒரு தடவை வரும் கோவில் கொடை விழா மாதிரி ஆகிவிடும்.

உயிரோடு இருந்த போது காணப்பட்ட பந்தம், பாசம் எல்லாம் காற்றில் கரைந்து காணாமலே போய் இருக்கும். சிலர் ஏதோ உறவே அத்து போய் விட்டது போல் நடந்து கொள்வார்கள். ஆனால் கண்கண்ட தெய்வங்களான நம் முன்னோர்கள் நம்மை அப்படியே விட்டு விடுவது இல்லை. ஆத்மாவாக இருந்து அவர்கள் தினம், தினம் நமக்கு அருளாசி வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

நீங்கள் அவர்களை கும்பிட்டாலும் சரி, கும்பிடாவிட்டாலும் சரி, நினைத்தாலும் சரி, நினைக்காவிட்டாலும் சரி, அவர்கள் உங்களுக்கு உதவிகள் செய்யத் தவறுவதே இல்லை. உங்களை, உங்கள் அருகில் இருந்து அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கர்ம வினைகளுக்கு ஏற்ப உங்களுக்கு நல்லது செய்கிறார்கள்.

உங்களுக்கு வரும் கெடுதல்களை அவர்கள்தான் தடுத்து நிறுத்துகிறார்கள். அந்த புண்ணிய ஆத்மாக்களின் இந்த புனித செயலால்தான், அவர்களது குடும்பம் இந்த பூ உலகில் தழைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறது. சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், ஒரு குடும்பத்தையும், அதை சார்ந்துள்ள குலத்தையும் காப்பது மறைந்த முன்னோர்கள்தான்.

நாம் கும்பிடாமலே நம் பித்ருக்கள் நமக்கு உதவிகள் செய்கிறார்கள் என்றால், நாம் அவர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து சிரார்த்தம் செய்து வணங்கினால் நம்மை எந்த அளவுக்கு அவர்கள் காப்பார்கள் என்று சொல்ல வேண்டியதில்லை. யார் ஒருவர் தன் முன்னோருக்கு அமாவாசைதோறும் தர்ப்பணம் கொடுக்கிறாரோ, அவரது குடும்பம் அமைதி பெற்று, மங்கள வாழ்வு பெற்று உயரிய நிலைக்கு சென்று கொண்டே இருக்கும்.

சாஸ்திர விதிப்படி ஒருவர், மறைந்த தன் மூதாதையர்களுக்கு ஆண்டுக்கு 96 நாட்கள் தர்ப்பணம் கொடுக்க வேண்டும். ஆனால் எல்லோராலும் 96 நாட்கள் தர்ப்பணம் செய்ய முடிவதில்லை. என்றாலும் முன்னோர்கள் இறந்த திதி நாளை கணக்கிட்டு பெரும்பாலானவர்கள் திதி கொடுத்து விடுகிறார்கள். அப்புறம் ஆடி அமாவாசை, தை அமாவாசையில் தவறாமல் தர்ப்பணம் செய்து விடுவார்கள்.

இப்படி எதுவுமே செய்யாமல், அதாவது திதி, தர்ப்பணம், சிரார்த்தம் என்று எதுவுமே செய்யாமல் கணிசமானவர்கள் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. ஏனெனில் அத்தகையவர்களுக்காகவே மகாளய பட்ச காலம் உள்ளது. புரட்டாசி மாதம் பவுர்ணமிக்கு மறுநாள் தொடங்கி அம்மாவாசை வரையிலான 15 நாட்களே மகாளயபட்ச நாட்களாகும்.

ஆடி அமாவாசை, தை அமாவாசை மற்றும் மற்ற மாத அமாவாசை நாட்களை விட, இந்த மகாளய அமாவாசை மிக, மிக சிறப்பு வாய்ந்ததாகும், இன்னும் சொல்லப் போனால் எந்த அமாவாசையும் இதற்கு நிகரே கிடையாது.

ஏன் தெரியுமா?

மகாளய பட்சத்தின் 15 நாட்களும் பித்ருக்கள் அனைவரும் வான் உலகில் இருந்து, தம் குடும்பத்தாரைத் தேடி பூமிக்கு வந்து விடுவார்கள். இந்த 15 நாட்களும் அவர்கள் நம் வீட்டில்தான் இருப்பார்கள். நமக்கு சாப்பாடு தர மாட்டார்களா? தாகம் தீர தண்ணீர் தர மாட்டார்களா? நல்ல உடை தரமாட்டார்களா? என்று ஏக்கத்தோடு நம்மைப் பார்த்துக் கொண்டே இருப்பார்கள்.

நம்மை ஆசை, ஆசையாக வளர்த்து நல்ல நிலைக்குஆளாக்கி விட்ட மறைந்த அந்த முன்னோர்களை நாம் அப்படி தவிக்க விடலாமா? அவர்களை பார்க்க வைத்துவிட்டு, நாம் மட்டும் வகை, வகையாக சாப்பிட்டால், அது நியாயமா? இதுதான் பாவமாகவும், தோஷமாகவும் மாறிவிடும். இத்தகைய நிலை ஏற்பட விடலாமா? விடக்கூடாது.

அதற்கு நாம் மகாளயபட்சமான 15 நாட்களும் மகாளய அமாவாசை தினத்தன்றும் கண்டிப்பாக மறைந்த நம் முன்னோர்களை நினைத்து வழிபட வேண்டும். உரிய நாளில், உரிய வகையில் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.

முக்கியமாக மகாளய பட்ச நாளில் அத்தியாவசியப் பொருட்களை தானம் கொடுக்க வேண்டும். அன்னதானம் செய்ய வேண்டும். இந்த தான-தர்மம் மூலம் மகிழ்ச்சி அடையும் உங்கள் முன்னோர்கள் மிகவும் திருப்தியுடன் உங்கள் வீட்டில் இருந்து பித்ருலோகத்துக்கு கிளம்பிச் செல்வார்கள். அவர்கள் மன நிறைவுடன் வாழ்த்த உங்கள் வாழ்க்கையில் மேம்பாடு உண்டாகும்.


http://Facebook page / easy 24 news

Previous Post

பிரபல இயக்குனருடன் இணையும் சூர்யா

Next Post

கிரக தோஷங்களை நீக்கும் புஷ்பரதேஸ்வரர்

Next Post
கிரக தோஷங்களை நீக்கும் புஷ்பரதேஸ்வரர்

கிரக தோஷங்களை நீக்கும் புஷ்பரதேஸ்வரர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures