மகளை வீட்டுக்குள் பூட்டிவைத்து வெளி உலகிலிருந்து அவரைத் துண்டித்து தொடர்ந்து சித்திரவதை செய்த தம்பதிக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வெளி உலகையே காணாத சிறுமி இதுவரை நாய், பூனை போன்றவற்றைக்கூட கண்டதில்லை.
சிறுமி இதுவரை பேருந்தில் கூடப் பயணம் செய்ததில்லை. சிறுமியின் தந்தைக்கு வயது சுமார் 50.
16 பாலியல் குற்றங்களை அவர் ஒப்புக்கொண்டுள்ளார். அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிறுமியைப் புறக்கணித்தது, பாலியல் பலாத்காரம் ஆகியவற்றின் தொடர்பில் 11 குற்றங்களை ஒப்புக்கொண்டுள்ளார் 20 வயதுக்கு மேற்பட்ட அவரது மனைவி.
சிறுமியின் தந்தை தமது மனைவியை இங்கிலாந்தில் சந்தித்திருக்கிறார்.
அப்போது மனைவிக்கு வயது 16. சந்தித்த சில மாதங்களிலேயே மனைவி கர்ப்பமானார்.
கணவர் இளம் பருவத்திலிருந்தே பாலியல் நடவடிக்கைகளுக்குத் தமது மனைவியைப் பழக்கப்படுத்தியிருக்கிறார்.
அதோடு மனைவியின் மனநல மருந்துகளைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார் கணவர்.
வீட்டில் அனைத்தும் கணவரது கட்டுப்பாட்டில்.
சிறுமி வீட்டிலேயே பாடங்களைக் கற்றுக்கொண்டார். வீடு எப்பொழுதும் பூட்டப்பட்டிருக்கும், சன்னல் திரைகள் எப்போதும் மூடப்பட்டிருக்கும்.
சிறுமி தற்போது வளர்ப்புப்பெற்றோர் திட்டத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ளார்.
அவர் தம்முடைய பாதிப்புகளிலிருந்து நிரந்தரமாக மீளுவாரா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது என்கின்றனர் மருத்துவர்கள்.

